தமிழகம்

கன்னியாகுமரி - புனே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்: மார்ச் 31 முதல் கோவை வழியாக இயக்கம்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி- மகாராஷ்டிர மாநிலம் புனே இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 31-ம் தேதி முதல் கோவை வழியாக மீண்டும் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி- புனே இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16382) வரும் 31-ம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.20 மணிக்கு புனே சென்றடையும். செல்லும் வழியில் இந்த ரயில், இரவு 7.57 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இதேபோல, புனே-கன்னியாகுமரி இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16381), புனேயிலிருந்து வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் நண்பகல் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். செல்லும் வழியில், இந்த ரயில் இரவு 11.52 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைந்து, இரவு 11.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT