தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மன்ற துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப் பட்டது. ஆனால் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 26-வது வார்டு திமுக உறுப்பினர் ராஜாமுகமது துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்ற திமுகவினர் ராஜி னாமா செய்ய வேண்டும் என தலைமை உத்தரவிட்டது. ஆனால் ராஜாமுகமது தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி தேனியில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ராஜினாமா செய்ய தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். இதனால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இருப்பினும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன், என்றார்.