தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்கள் மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகளை கண்காணிக்க 2 மாவட்டத்துக்கு ஒரு வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவை சுமுகமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக தேர்தல்துறை எடுத்து வரு கிறது. தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை களின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தேர்தல் விதிமீறல், பணம் பதுக் கல், பணம் பட்டுவாடா தொடர்பாக இணையதளம், 1950 மற்றும் வாட்ஸ் அப் எண்ணில் வரும் புகார் கள் மீது உடனடி நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தற்போது இந்த புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை களை கண்காணிக்க, 2 மாவட்டத் துக்கு ஒரு மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, 516 புகார்கள் வந் துள்ளபோதும், அவற்றில் 10 புகார் களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தான், பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஈரோட்டில், சிறு கடன் நிறு வனத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதே போல், ஈரோட்டில் ஆரத்தி எடுத்ததற்கு பணம் கொடுத்தது தொடர்பாக 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்களை கண் காணிக்க, பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் 118 பேர் மே 11-ம் தேதி தமிழகத்துக்கு வருகின்றனர்.
வேட்பாளர் விவரம்
தமிழக வாக்காளர்களில் 2 கோடி பேர் தங்கள் கைபேசி எண்களை பதிவு செய்துள்ளனர். மே 2-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாரானதும், இந்த வாக் காளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட் பாளர்கள் பெயர், கட்சி ஆகிய விவ ரங்கள் குறுஞ்செய்தியாக அனுப் பப்படும். பட்டியல் பெரியதாக இருந்தால், 2 அல்லது 3 குறுஞ் செய்திகளாக பிரித்து அனுப்பப் படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
100 வயதை தாண்டிய 7,627 பேர்
தமிழக மொத்த வாக்காளர்கள் தொடர்பான துணை வாக்காளர் பட்டியல் நாளை (29-ம் தேதி) வெளியிடப்படும். பட்டியல்படி, தமிழகம் முழுவதும் 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். அதிகபட்சமாக வேலூர்- 597, கோவை- 440, சென்னை- 434, திருப்பூர்- 403, நெல்லையில்-359 பேர் 100 வயதை தாண்டியவர்கள் உள்ளனர். 130 வயதை தாண்டியவர்கள் 28 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 100 வயதை தாண்டிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. நேரடியாக சென்று வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்