பர்கூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நேற்று இந்திய நதிகள் இணைப்பு இயக்கம் சார்பில் நதிகளை இணைக்க வேண்டும், தேசிய நீர்வழிச்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்தில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கும் பயணத்தை தொடங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, வாக்கர் சர்தார் தலைமை வகித்தார். இதில், முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்க தலைவர் பழனி, துணைத் தலைவர் பச்சப்பன், செயலாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் முருகன், லோகிதாசன், ராஜேந்திரன், குழந்தைவேலு ஆகியோர் தலைமையில் விடியல் அறக்கட்டளையைச் சேர்ந்த விஷ்ணுகுமார், வெங்கடாசலம், மனோகரன், சுரேஷ், ரகு, அன்பு, வெங்கடேசன் உள்ளிட்டோர் இருசக்கர வாகன பயணத்தை தொடங்கினர்.
இவர்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலம் வழியாக 100 நாட்களில் டெல்லியை சென்றடைந்து, பின்னர் அங்கு பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர்.