தமிழகம்

வாக்காளர் விழிப்புணர்வுக்காக பாராசூட்டில் பறந்த நாகை மாவட்ட ஆட்சியர்

செய்திப்பிரிவு

நாகை மாவட்ட தேர்தல் அலுவல ரும், ஆட்சியருமான எஸ்.பழனி சாமி, வாக்காளர் விழிப்புணர்வுக் காக நேற்று பாராசூட்டில் பறந் தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.

இந்நிலையில், வாக்கா ளர் விழிப்புணர்வுக்காக நாகை புதிய கடற்கரையில், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, பாராசூட்டில் நேற்று பறந்தார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “நாகை மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான 138 வாக்குச்சாவடிகளை இலக்காகக் கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு வருகின்றன.

தெருமுனைப் பிரச்சாரம், நாட கம், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டுதல், மனிதச் சங்கிலி, விழிப்புணர்வுப் பேரணி போன்றவை நடத்தப்பட்டு வருகின் றன. இதையடுத்து, நாகை புதிய கடற்கரையில் பாராசூட்டில் பறக் கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வேதாரண்யம், மயி லாடுதுறை உள்ளிட்ட பகுதிகளி லும் பாராசூட்டில் பறந்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண் ணன், மாவட்ட வருவாய் அலுவ லர் முத்துமாரி, கோட்டாட்சியர் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அலு வலர் நாகேந்திரன், வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT