மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம். 
தமிழகம்

''தமிழ்நிலத்தை திமுக என்றும் காக்கும்''; அண்ணா தலைமையில் முதன்முதலில் ஆட்சியமைத்த நாளில் ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: ''தமிழ்நிலத்தை திமுக என்றும் காக்கும்'' என்று தமிழகத்தில் அண்ணா தலைமையில் முதன்முதலில் திமுக ஆட்சியமைத்த நாளுக்கான வாழ்த்துச் செய்தியாக மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் அண்ணா தலைமையில் 1967ல் இதேநாளில் ஆட்சிப் பொறுப்பே ஏற்றது. அதற்கான வாழ்த்து செய்தியை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

''தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று!

எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்!

இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், பெரியார் - அண்ணா - கருணாநிதி காட்டிய வழியில் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT