தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்கு பெற்று திமுக முதலிடம்: பாஜக 3-ம் இடத்தை பிடித்தது

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. பாஜக 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 பேரூராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிப்பதற்காக 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவற்றுக்கான வாக்குப்பதிவு கடந்தபிப்.19-ம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகின. இதில் 40%-க்கு மேலான வாக்குகளை திமுக பெற்றுள்ளது. 2-ம் இடத்தை அதிமுக பெற்றுள்ளது.

தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக தனித்து நின்று, மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்திய பாஜக3-ம் இடம் பிடித்துள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

மாநகராட்சிகளுக்கான தேர்தலில் திமுக 43.59%, அதிமுக 24%, பாஜக 7.17%, காங்கிரஸ் 3.16%, நாம் தமிழர் 2.51%, மநீம 1.82%, பாமக 1.42%, அமமுக 1.38%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1.31%, தேமுதிக0.95%, மதிமுக 0.90%, இந்திய கம்யூனிஸ்ட் 0.88%, விசிக 0.72%, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.27% வாக்குகள் பெற்றுள்ளன.

நகராட்சிகளுக்கான தேர்தலில் திமுக 43.49%, அதிமுக 26.86%, பாஜக 3.31%, காங்கிரஸ் 3.04%, பாமக 1.64%, அமமுக 1.49%, மார்க்சிஸ்ட் 0.82%, நாம் தமிழர் கட்சி 0.74%, மதிமுக 0.69%, தேமுதிக 0.67%, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.64%, விசிக 0.62%, இந்திய கம்யூனிஸ்ட் 0.38%, மநீம 0.21% வாக்குகள் பெற்றுள்ளன.

பேரூராட்சிகளுக்கான தேர்தலில் திமுக 41.91%, அதிமுக 25.56%, பாஜக 4.30%, காங்கிரஸ் 3.85%, பாமக 1.56%, அமமுக 1.35%, மார்க்சிஸ்ட்1.34%, நாம் தமிழர் கட்சி 0.80%,விசிக 0.61%, தேமுதிக 0.55%, இந்திய கம்யூனிஸ்ட் 0.44%, மதிமுக 0.36%வாக்குகள் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT