தமிழகம்

சென்னை - மதுரை இடையே இரட்டை வழிபாதை 2017-ல் முடிவடையும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை - மதுரை இடையே நடை பெற்று வரும் இரட்டை வழிபாதை பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக் குள் முடிவடையும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வஷிஷ்ட ஜோஹ்ரி தெரிவித்து உள்ளார்.

61-வது ரயில்வே வார விழா பிராட்வேயில் நடந்தது. இந்த விழாவில் தெற்கு ரயில்வேயில் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கிய பாலக்காடு மண்டலத் துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஷ்ட ஜோஹ்ரி கேடயம் வழங்கி பாராட்டினார். இதேபோல், வருவாய், ரயில்கள் இயக்கம், பாதுகாப்பு அம்சம், சிக்னல்துறை, தூய்மை பணிகள் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய ஒவ்வொரு ரயில்வே மண்டலங்களுக்கும் கேடயங்களும், பல்வேறு பிரிவு களில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 159 பேருக்கு விருதுகளும் வழங் கப்பட்டன.

இந்த விழாவில் வஷிஷ்ட ஜோஹ்ரி பேசியதாவது:

தெற்கு ரயில்வே இந்த ஆண்டில் மகத்தான பணியை செய்துள்ளது. பயணிகளின் சேவை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை தெற்கு ரயில்வே உடனுக்குடன் அறிமுகம் செய்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வரு கின்றன.

கடந்த 2015-16ம் ஆண்டில் தெற்கு ரயில்வே மொத்தம் ரூ.7,641 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நிதி ஆண்டில் இரட்டை பாதை மற்றும் அகலப்பாதை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை - மதுரை இடையேயான இரட்டை வழிபாதையின் ஒட்டுமொத்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் ஆர்.வெங்கடசாமி, தலைமை மேலாளர் (இயக்கம்) எஸ்.அனந்த ராமன், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அனுபம்சர்மா, மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி டி.லட்சுமணன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT