சிவகாசி குடிநீர் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்து வைப்பேன் என்று சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயராகப் பதவியேற்ற சங்கீதா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளை இணைத்து சிவகாசி மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் உள்ள 48 வார்டுக ளுக்கான உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெரும் பாலான இடங்களை கைப்பற்றின. 11 அதிமுக கவுன்சிலர்களில் 9 பேர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், திமுக சார்பில் மேயர் வேட்பாளராக, 34-வது வார்டில் வெற்றிபெற்ற சங்கீதா நேற்று முன்தினம் அறி விக்கப்பட்டார். துணைமேயர் வேட்பாளராக 35-வது வார்டில் வெற்றிபெற்ற விக்னேஷ்பிரியா அறிவிக்கப்பட்டார்.
சிவகாசி மாநகராட்சி அலு வலகத்தில் மேயரை தேர்ந்தெடுப் பதற்கான மறைமுகத் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. இப் பதவிக்கு திமுக சார்பில் சங்கீதா வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சங்கீதா போட்டியின்றி மேய ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண மூர்த்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது மேயருக்கான அங்கி மற்றும் வெள்ளி செங்கோல் ஆகியவை வழங்கப்பட்டன. மேயர் சங்கீதாவுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துத் தெரிவித் தார்.
பின்னர் மேயர் சங்கீதா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சிவகாசி மாநகராட்சியில் நீடிக்கும் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பேன். சாலை வசதிகளையும், சுகாதார வசதி களையும் மேம்படுத்துவேன். பட்டாசு, அச்சு உள்ளிட்ட தொழில்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிவகாசியை குட்டி ஜப்பான் ஆக்கு வேன் என்று கூறினார்.
தொடர்ந்து, பிற்பகலில் துணை மேயரை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் விக்னேஷ்பிரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பதவிப் பிர மாணம் செய்துவைத்து வாழ்த்து தெரிவித்தார்.