மதிமுக, சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த ஆர்.கே.காளிதாசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுந்தர், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கே.டி.பி.அதியமான் (திருநெல்வேலி மேற்கு), பிரபு ( ராமநாதபுரம்) உள்ளிட்ட 25 நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.சசிகுமார், நகர அவைத் தலைவர் காயத்ரி பி. சின்னச்சாமி, வார்டு செயலாளர்கள்
எம்.எஸ்.ஜெகதீசன், பி.சிவக்குமாரன் உள்ளிட்ட 20 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.