தமிழகம்

கிருஷ்ணகிரி: மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு கல் உடைக்க குத்தகை உரிமம் வழங்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்தவர்களுக்கு உடைகல் மற்றும் ஜல்லி கல் வெட்டி எடுக்க நேரடி குத்தகை உரிமம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு புறம்போக்கு நிலங்களில் உடைகல் மற்றும் ஜல்லி கல் வெட்டி எடுக்க கிருஷ்ணகிரி வட்டத்தில் 3 இடங்கள், பர்கூர் வட்டத்தில் 1, ஓசூர் வட்டத்தில் 8, சூளகிரி வட்டத்தில் 13 மற்றும் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் 2 என மொத்தம் 27 இடங்களில் கற்கள் வெட்டி எடுத்துக் கொள்ள நேரடி குத்தகை உரிமம் பொன்விழா கிராம சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களால் அமைக்கப்பட்டுள்ள சங்கங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் அல்லது கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மகளிர் திட்ட திட்ட அலுவலர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 9-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு சமர்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விதிகளின்படி இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT