தருமபுரி மாவட்ட போலி வாக் காளர்களை நீக்காவிட்டால் மாவட் டத்தில் தேர்தல் நடக்க அனு மதிக்க மாட்டோம் என்று அன்புமணி நேற்று தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னா கரம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் தொடர்பாக தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி, பென் னாகரம், ஏரியூர் ஆகிய 3 இடங்களில் பாமக-வின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட் டங்களுக்கு இடையே அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியது:
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இதுவரை முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பென்னாகரம் வட்டம் ஏரியூர் பகுதியில் பலர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதிமுக அடிக்கடி வேட்பாளர் களை மாற்றுவது பாமக-வைக் கண்டு ஏற்பட்ட தோல்வி பயத்தால்தான். மதுவிலக்கு அறிவிப்பும் கூட தோல்வி பயத் தால்தான். பாமக-வின் பல அறிவிப்புகளை, கொள்கைகளை திமுக காப்பியடித்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள் ளது. மதுவிலக்கும் அதில் ஒன்று. மதுவிலக்கு ஏற் படுத்த புதுசட்டம் கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் கூறுகிறார்.
மதுவிலக்குக்கு எதுக்கு சட்டம்? ஒரே ஒரு உத்தரவு போதும். சட்டம் உருவாக்கி மதுவிலக்கு கொண்டு வருவோம் என்பது வழக்கமான ஏமாற்று வேலை. திமுக வென் றால் அக்கட்சியினருக்கு சொந்தமான மது ஆலைகளை மூடுவதாக கனிமொழி கூறுகிறார். இப்போதே மூடினால் என்ன? தருமபுரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் சுமார் 1.5லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அதிமுக-வினரால் திட்டமிட்டு சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்.
இதுபற்றி ஏற்கெனவே புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாநில தேர்தல் ஆணையமும் நடுநிலையாக செயல்படவில்லை. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணை யத்திடம் மீண்டும் புகார் அளிக்க உள்ளோம். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காவிடில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடக்க விடமாட்டோம்.
இவ்வாறு பேசினார்.