தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 50-வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 87 வயது மூதாட்டியும், பூசாரிகளும் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டனர். முன்னதாக முத்தம்மாள் 40 நாட்கள் விரதம் இருந்தார்.

பின்னர் கொதிக்கும் நெய்யை எடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். முத்தம்மாள் கடந்த 50 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT