தமிழகம்

திருமங்கலம் பார்முலாவுக்கு இம்முறை வாய்ப்பில்லை: திமுக பின்வாங்கியதால் உற்சாகத்தில் அதிமுக அமைச்சர்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

'இடைத்தேர்தல் பார்முலா' என்ற மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்திய திருமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முடிவில் இருந்து கடைசி நேரத்தில் திமுக பின்வாங்கியதால், இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் உற்சாகத்துடன் வலம் வருகிறார்.

அதனால், இந்த தொகுதியில் திருமங்கலம் பார்முலாவுக்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படு கிறது. மதுரை மாவட்டத்தின் திருமங் கலம் சட்டமன்றத் தொகுதி, தமிழகத்திலேயே பிரபலமான தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் 14 சட்டப்பேரவைத் தேர்தல்கள், ஒரு இடைத்தேர்தல் உள்பட 15 தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது.

5 முறை காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை பார்வர்டு பிளாக் கட்சியும், 3 முறை திமுக வும், 4 முறை அதிமுகவும், மதிமுக ஒருமுறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள் ளனர். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் வீர.இளவரசன் (மதிமுக), 2009 இடைத்தேர்தலில் லதா அதியமான் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ம.முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார். இதில் 2009-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம் கொடுத்த விஷயம் 'திருமங்கலம் பார்முலா' என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதனால், தமிழ கத்தில் எந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும், அதே 'திருமங்கலம் பார்முலா'வை மற்ற கட்சிகள் பின்பற்ற இந்த தொகுதி யில் நடந்த சம்பவம் மோசமான முன்னுதாரணமாகி விட்டது.

இந்நிலையில், இந்தமுறை இங்கு திமுக - அதிமுக நேரடிப் போட்டி ஏற்படாததால் அந்த பார்முலாவுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு ள்ளதாக அரசியல் கட்சியி னர் கூறுகின்றனர். இந்த தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த தொகுதியில் ஆரம்பத்தில் திமுக போட்டியிட ஏற்பாடுகள் நடைபெற்றன. திமுக சார்பில் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் போட்டியிடுவதாக, கடந்த ஓராண்டாக திமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிறுத்தப்பட்டதால் திமுக இந்த தொகுதியில் இருந்து பின் வாங்கியது. இங்கு போட்டியிட இருந்த மணிமாறன், திருப்பரங் குன்றத்துக்கு மாறினார். கடைசியில், இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்க ப்பட்டது.

காங்கிரஸ் இந்த தொகுதியை கேட்கவில்லை. அதனால், காங்கிரஸ் கட்சியினர் ஆர்வமில் லாமல் உள்ளதாகக் கூறப்படு கிறது. திமுகவினர் ஒத்துழைத்தால் கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுவதால் இந்த தொகுதி விஐபி அந்தஸ்து ஏற்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சேடபட்டி தொகுதி கலைக்கப் பட்டு, அதிலிருந்த சில பகுதிகள் திருமங்கலத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தொகுதியில் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். விமான நிலைய சாலையில் ரயில்வே மேம்பாலம், திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம், சிவரக்கோட்டையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துதல், பெரிய தொழிற் சாலைகள் இல்லாதது, இப்பகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது.

SCROLL FOR NEXT