தமிழகம்

கும்பகோணம் தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு: ஒருநபர் ஆணையம் பரிந்துரை

செய்திப்பிரிவு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் பெற் றோருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப் பீடு வழங்க ஒருநபர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கும்பகோணத்தில் ஒரே வளாகத் தில் செயல்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி யானார்கள். 16 குழந்தைகள் படு காயங்களுடன் உயிர் தப்பினர். இறந்த குழந்தைகளின் குடும்பத் துக்கு ரூ.50 ஆயிரமும், காய மடைந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிர மும் அப்போது இழப்பீடாக தரப்பட் டது.

இதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட் ராமன் விசாரணை நடத்தி கடந்த மார்ச் 31 அன்று தனது அறிக் கையை சமர்ப்பித்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒருநபர் ஆணையர் அளித்த அறிக்கையின் நகலை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கவும். இந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசார ணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த அறிக்கை குறித்து மனு தாரர் தரப்பு வழக்கறிஞரான எஸ்.தமிழரசன் கூறியதாவது:

கும்பகோணம் பள்ளி தீ விபத்து யாராலும் ஜீரணிக்க முடியாத கொடூரமான சம்பவம். அரசு மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தில் 94 இளம் தளிர்கள் இந்த விபத்தில் அநியாயமாக பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகிவிட்டது. நாங்கள் கூடுதலாக இழப்பீடு வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில், ஒருநபர் ஆணையராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தனது பரிந்துரையில், இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் வழங்குமாறு கூறியுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் கவுசல்யா, மெர்ஸி ஏஞ்சல் மற்றும் மாணவர் விஜய் ஆகிய 3 பேருக்கு மட்டும் ரூ.6 லட்சமும், மாணவர்கள் ராகுல், திவ்யா, ராஜ்குமார் ஆகியோருக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க வும், தற்போது பிளஸ் 2 படித்து வரும் கவுசல்யாவின் பட்டப் படிப்பை தமிழக அரசு ஏற்க வேண் டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாங்கள் விபத்தில் இறந்த ஒவ் வொரு குழந்தைகளின் பெற்றோ ருக்கும் தலா ரூ. 25 லட்சம் கோரி னோம். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வெடி விபத்தில் இறந்தவர்களுக்குகூட தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங் கப்பட்டுள்ளது. ஆகவே ஒருநபர் ஆணையரின் பரிந்துரை எங்களுக்கு திருப்தியளிக்க வில்லை. அவர் எந்த அடிப்படையில் ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பதை தீர்மானித்தார் என தெரியவில்லை. எனவே கூடுதல் இழப்பீடு கோரி மேல்முறையீடு செய்யவுள்ளோம்.

இவ்வாறு எஸ்.தமிழரசன் கூறினார்.

SCROLL FOR NEXT