சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இதுவரை செயல்படுத்தப்படாத திட்டங்களை பாமக பட்டியலிட்டுள்ளது.
பாமக இன்று வெளியிட்ட வேளாண் நிழல் பட்ஜெட்டில், தமிழக அரசு தனது முதல் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுமார் 40 திட்டங்களில் 26 திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அவற்றின் விவரம்:
1. வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப் பிரிவு தொடங்கப்படும்.
2. நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.
3. இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோர் ஆக்குதல்.
4. ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்.
5. சிறு தானிய இயக்கம்
6. ஏற்றம் தரும் எண்ணெய் வித்துகள் திட்டம்.
7. தென்னை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான 'சீர்மிகு தென்னை சாகுபடி'
8. அண்ணா பண்ணை மேம்பாட்டுத் திட்டம்.
9. கூட்டுப் பண்ணையத் திட்டம்
10. அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்
11. சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்
12. வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம்
13. மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கும் திட்டம்
14. நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டம்
15. தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் திட்டம்.
16. கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் அமைக்கும் திட்டம்.
17. வடலூரில் புதிய அரசுத் தோட்டக்கலை பூங்கா அமைக்கும் திட்டம்.
18. சிக்கன நீர்ப்பாசனத் திட்டம்
19. பண்ருட்டி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 கோடி செலவில் குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்கும் திட்டம்.
20. சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இல்லம் தேடி பண்ணைக் காய்கறிகள் வழங்க நடமாடும் காய்கனி
அங்காடிகள் அமைக்கும் திட்டம்.
21. கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கும் திட்டம்.
22. முருங்கை சிறப்பு ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் திட்டம்.
23. சென்னை கொளத்தூரில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம்.
24. உணவு பதப்படுத்துதலுக்காக தனி அமைப்பு
25. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்
26. திருச்சி - நாகப்பட்டினம் பகுதியினை வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவித்தல்