தமிழகம்

நீட் தேர்வால் கிடைத்த நன்மை - மத்திய மருத்துவ பல்கலை.களில் 2,143 தமிழக மாணவர்களுக்கு இடம்: பாஜக செய்தித் தொடர்பாளர் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வின் பயனாக மத்திய மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஒரே ஆண்டில் 2,143 தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டு அகில இந்தியஒதுக்கீட்டில் மத்திய மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழங்களில் உள்ள 15 சதவீதம் ஒதுக்கீட்டின் மொத்த இடங்கள் 15,647. இதில் தமிழக மாணவர்களுக்கு 2,143 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் 13.7 சதவீதம் இடங்கள் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

நீட் தேர்வுக்கு முன்பு பல்வேறுநுழைவுத் தேர்வுகள் இருந்த நிலையில், தற்போது நீட் தேர்வு எழுதிஒரே வருடத்தில் 2,143 தமிழக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்கு முந்தைய 10 வருடகாலத்தில் மொத்தமாககூட நூறு தமிழக மாணவர்கள் இடம் பெற்றதில்லை. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் நன்மை இது.

ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் தமிழகத்துக்கு பயனளிக்கும் நீட் தேர்வை எதிர்க்கும் மர்மம் என்ன? அதிக அளவில் தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்வதை தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகள் தடுப்பது ஏன்?

SCROLL FOR NEXT