தமிழகம்

புதுச்சத்திரம் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை விநியோகம்: நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுச்சத்திரம் அருகே பள்ளிக் குழந்தைக ளுக்கு அழுகிய முட்டைகளை விநியோகம் செய் துள்ளனர். அந்த நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சத்திரம் அருகே உள்ள அத்தியாநல் லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த 25-ம் தேதி மதிய உணவில் வழக்கம்போல் மாணவ, மாணவிகளுக்கு முட்டை வழங்கப்பட்டது. இதில் அழுகிய முட்டைகள் இருந்ததால் சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் உடனடியாக சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பள்ளிக்கு அழுகிய முட்டைகள் சப்ளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு வழங் கப்படும் முட்டை தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT