தி.மலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் வசிப்பவர் தங்கராஜ். இவர், மட்டப்பாறையில் உள்ள தனது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் பட்டி அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்ந்து வந்துள்ளார்.
பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேற்று உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்திருந்தன. ஆடுகளில் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதி யில் மர்ம விலங்குகள் கடித்துள்ள காயங்கள் உள்ளன.
இதுகுறித்து வேட்டவலம் கால்நடை பராமரிப்பு மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்ககப்பட்டது. அதன்படி, கால்நடை மருத்துவக் குழுவினர், நேரில் வந்து பார்வையிட்டு பிரேதப் பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, பெரிய பள்ளம் தோண்டி ஆடுகள் புதைக்கப் பட்டன. காயமடைந்த ஆடு களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. வருவாய் துறை மூலம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ள ஆடுகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். வேட்டவலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டியில் வளர்க் கப்படும் ஆடுகள், மர்ம விலங்கு கள் கடித்து உயிரிழப்பது தொடர்கிறது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.