தமிழக முதல்வர் ஸ்டாலின் தனதுபிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு அண்ணா,கருணாநிதி நினைவிடத்திலும், 7.15 மணிக்கு பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்று தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெறுகிறார்.
‘முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை மனிதநேய திருநாளாக கொண்டாடுகிறோம். இதையொட்டி கருத்தரங்கம், நகைச்சுவை அரங்கம், இசையரங்கம், சொற்போர் அரங்கம் என அறிவுசார் நிகழ்ச்சிகளும், மருத்துவம், ரத்த தான முகாம்கள், மாணவ,மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் உட்பட பல்வேறுநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு அரசியல் தலைவர்களின் வாழ்த்தரங்க நிகழ்ச்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடக்கிறது.