தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்: ஏப்ரல் 18-ல் தேரோட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பெருவுடையார், பெரிய நாயகி அம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, சின்னமனூர் ஏ.சித்ரா குழுவினரின் சின்ன மேளம் கச்சேரி நடைபெற்றது.

விழாவையொட்டி, தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, சின்ன மேளம் இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும் 12-ம் தேதி காலை 10.30 மணியளவில் கோயிலுக்குள் எண் திசைக் கொடியேற்றம், அன்று இரவு 7 மணியளவில் தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந் தருளும் செங்கோல் வைபவம் நடைபெறவுள்ளன. வரும் 18-ம் தேதி காலை 6 மணியளவில், நான்கு ராஜ வீதிகளில் சித்திரை தேரோட்டம், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் 21-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT