சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் பேரூ ராட்சித் தலைவராக திமுகவில் சட்டக் கல்லூரி மாணவருக்கு வாய்ப்புள்ளது.
கோட்டையூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் ஒரு சுயேச்சை போட்டியின்றி தேர்வானார். திமுக- 7, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் தலா 1, சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி கோட்டையூர் பேரூராட்சியை கைப்பற்றியது. சாக்கோட்டை மேற்கு திமுக ஒன்றியச் செயலாளர் ஆனந்தின் மனைவி திலகவதி 11-வது வார்டில் வெற்றி பெற்றார். அதேபோல், ஆனந்தின் மகன் கார்த்திக்சோலை 8-வது வார்டில் வெற்றி பெற்றார். ஒரே குடும்பத்தில் தாய், மகன் வெற்றிபெற்ற நிலையில் மகன் கார்த்திக்சோலைக்கு பேரூராட்சித் தலைவர் பதவி ஒதுக்க வாய்ப்புள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.
25 வயதான கார்த்திக்சோலை பி.காம் முடித்துவிட்டு, எல்.எல்.பி. படித்து வருகிறார். அவர் தேர்வு செய்யப்பட்டால், மாவட்டத்திலேயே அவர்தான் இளம் வயது பேரூராட்சித் தலைவராக இருப்பார்.