தமிழகம்

தமிழகத்துக்கு வெளிச்சம் தரும் கூட்டணி: ஜி.கே.வாசன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமாகா வேட் பாளர் எஸ்.டி.ஜெயக்குமாரை ஆதரித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் இன்னும் பல கிராமங்களில் அடைப்படை தேவைகள் செய்து தரப்பட வில்லை. காமராஜர் ஆட்சியில் தான் நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, அணைக்கட்டுகள் போன்றவை உருவாக்கப்பட்டன. அதற்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றவில்லை.

கிராமம்தோறும் பள்ளி களைத் திறந்தார் காமராஜர். ஆனால், அதிமுக, திமுக அரசுகள் டாஸ்மாக் கடைகளைத் திறந்து, மக்களின் வாழ்வைச் சீரழித்தன. தற்போது, மதுக் கடைகளை மூடுவோம் என்று கூற அவர்களுக்கு எந்த தகு தியும் கிடையாது. மக்களை ஏமாற்றிய, துரோகம் செய்த அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படையான நிர்வாகமே தமிழக மக்களின் தற்போதைய தேவை. எங்கள் கூட்டணித் தலைவர்கள் ஊழலுக்கு அப்பாற் பட்டவர்கள். எனவே, ஊழல் இல்லாத ஆட்சியைத் தரு வோம் என்று அதிமுக, திமுக தலைவர்களால் கூற முடியுமா?

மக்கள் நலக் கூட்டணி அரசு அமைந்தால் மதுக்கடைகள் மூடப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் படும். தேக்கமின்றி நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் குவின்டாலுக்கு ரூ.3,000, கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து, திருவையாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளர் வெ.ஜீவக்குமாரை ஆத ரித்துப் பேசினார்.

SCROLL FOR NEXT