தஞ்சாவூர் அருகே நாஞ்சிக் கோட்டையில் நேற்று ஜல்லிக் கட்டு நடைபெற்றது. கூடுதல் ஆட் சியர் சுகபுத்ரா கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத் தார்.
இதில், தஞ்சாவூர், புதுக் கோட்டை, திருச்சி, அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 650 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இதில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 35 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடி படாத காளைகளின் உரிமையா ளர்களுக்கும் பரிசுகள் வழங் கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏஎஸ்பி பிருந்தா தலைமையில் வல்லம் போலீஸார் செய்திருந்தனர்.