ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரால், அமைதி, பொருளாதாரம், மனித குலத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி, நாகை ஒன்றியம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் செ.பிரவீன், போர் வேண்டாம் என ஆங்கிலத்தில் எழுதி அதன் அருகில், தொடர்ச்சியாக சிரசாசனம் செய்தும், தலைகீழாக நடந்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும், போர் வேண்டாம். அமைதி வேண்டும் என்று முழக்கமிட்டு மாணவர் பிரவீனை உற்சாகப்படுத்தினர்.