தமிழகம்

வேலூரில் பெண் காவலர் தற்கொலையில் சிக்கிய கடிதம்: காவல்துறை விசாரணை

செய்திப்பிரிவு

வேலூர் ஆயுதப்படை பெண் காவலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் ஆயுதப்படை காவல ராக பணியாற்றி வந்தவர் இந்து மதி (26). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவர் குடும்பத் தினருடன் ஆயுத்தப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வேலூர் தெற்கு காவல் நிலைய காவலர்கள் விரைந்து சென்று இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், இந்துமதி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், ‘தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. அம்மா.. என் மகளை பார்த்துக்கொள்’ என எழுதி வைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT