‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில், முதல் தலை முறை வாக்காளர்களுக்கான ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாணவர் திருவிழா நிகழ்ச்சி சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி யில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முதல்முறையாக வாக்களிக்கவுள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, வாக்க ளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாணவர் திருவிழா நிகழ்ச்சியை நடத்திவருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இதுவரை வேலூர், குடியாத்தம், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் வெற்றி கரமாக நடத்தப்பட்டன. அனைத்து இடங்களிலும் கல்லூரி மாணவ -மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில், 5-வது இடமாக சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ‘வாக்காளர் வாய்ஸ்’ மாணவர் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்தல் ஜனநாயகத்தின் பெருமையைப் பேசும் இந்த நிகழ்ச்சி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
கவிஞர் அண்ணாமலை எழுதி, தாஜ்நூர் இசையமைப்பில் உருவான வாக்களிப்பதன் அவசி யம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு பாடலைத் தொடர்ந்து. காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். ஜேப்பி யார் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ரெஜினா ஜேப்பியார் தலைமை வகிக்கிறார். தேர்தல் விழிப்புணர்வு திருவிழா வின் நோக்கம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் உரையாற்றுகிறார். இந்திய ஜனநாயகத்தின் சிறப்புகள் குறித்தும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் லயோலா கல்லூரி பேராசிரியர் இரா.காளீஸ்வரன், எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.