கூட்டுறவுச் சங்கங்களில் பட்டுச் சேலைகளின் உற் பத்தி யைக் குறைத்து, தனியார் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக கைத்தறி மற்றும் தூணிநூல் துறை செயல் படுவதாக, சிஐடியூவின் நெசவாளர் சம்மேளனம் குற்றச் சாட்டு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்துக்கு பட்டுச் சேலைகள் வாங்க வருபவர் கள், கூட்டுறவுச் சங்க விற் பனைய கங்களான அண்ணா மற்றும் காமாட்சி, திருவள்ளூ வர், முருகன் ஆகிய பட்டு கூட்டுறவுச் சங்கங்களுக் குதான் வருகின்றனர்.
தனியார் கடைகளின் விற் பனையை ஊக்குவுக்கும் விதமாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறையினர் அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு சங்கங்களில் பட்டுச் சேலை உற்பத்தியைக் குறைத் துள்ளதாக தெரியவருகிறது.இதுகு றித்து,கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முத்துகுமார் கூறியதாவது: அண்ணா மற்றும் காமாட்சி பட்டு கூட்டுறவுச் சங்களில், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள முகூர்த்த பட்டுப் புடவைகள் அதிகமாக விற்பனையாகின்றன.
இதேபோல், முருகன், திருவள்ளுவர் மற்றும் கலை ஞர் ஆகிய பட்டு கூட்டுறவுச் சங்கங்களில் ரூ.20 ஆரயிரம் மதிப்புள்ள முகூர்த்த பட்டுப் புடவைகள் அதிமாக விற்பனை யாகின்றன. இந்நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் லதா, மேற்கண்ட பட்டு கூட்டுறவுச் சங்கங்களில் அண்ணா கூட்டு றவு சங்கத்தைத் தவிர்த்து, மீதமுள்ள கூட்டுறவு சங்கங் களில் மட்டும் பட்டுப் புடவை களை உற்பத்தி செய்ய வேண்டும் என உத்தர விட்டுள்ளார். இதனால், கைத் தறித்துறை தனியார் பட்டுச் சேலை உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போல் தெரிகிறது.
எனவே, மேற்கண்ட உத்தரவை கைத்தறித்துறைத் திரும்ப பெற வேண்டும். இந்த உத்தரவை திரும்பப் பெறாவிட்டால், நெசவாளர்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்றார்