சென்னை: சென்னை மாநகராட்சி 122-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு, கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷீபா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர் பேசும்போது, " முதல்வர்மு.க.ஸ்டாலினின் சாதனைகளே எனது வெற்றிக்குக் காரணம். இந்த வார்டில் குடிநீர், கழிவு நீர்க் கால்வாய், பூங்காக்கள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர நான் பாடுபடுவேன்.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், பேரறிஞர் அண்ணாவின் சீரணிப்படை, முதியோர் கல்வி இயக்கம் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகளில் நான் பணியாற்றி உள்ளேன். எனது இந்த பொது வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவேன்.
தேர்தலில் 4,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கும், திமுக மாவட்டச் செயலர் த.வேலு, பகுதிச்செயலர் நந்தனம் மதி, வட்டச் செயலர்கள் நாகராஜ், செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.