தமிழகம்

சித்ரா பவுர்ணமி திருவிழா: மங்கலதேவி கண்ணகி கோயிலில் இரு மாநில பக்தர்கள் குவிந்தனர்

செய்திப்பிரிவு

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நேற்று இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி என்ற கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று நடை பெற்றது. இந்த விழாவில் தமிழக, கேரளத்தை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்தி ருந்து தரிசனம் செய்தனர்.

முன்னதாக, காலை 5 மணிக்கு மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கோயி லுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டனர். அதன் பின்னர் 6 மணிக்கு இரு மாநில பக்தர்கள் செல்லத் தொடங்கினர். சிகரெட், போதை வஸ்துகள், அசைவ உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததோடு, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய யாரும் அனுமதிக்கப்பட வில்லை. குடிநீருக்காக 5 லிட்டர் கேன்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டன. மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கண்ணகி கோயில் அடிவாரத்தில் உள்ள பளியங்குடியில் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத் தினர்.

தேனி மாவட்ட செய்தியாளர் கள் மற்றும் புகைப்படதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட தோடு, அடையாள அட்டை இருந்த வர்கள் மட்டும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோயில் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகள் முழுவதும், கேரள வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. திண்டுக்கல், தேனி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன. சில இடங்களில் ஜீப் வாடகை நிர்ணயிக்கப்பட்ட கட்ட ணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மங்கலதேவி, கண்ணகி அறக்கட்டளை சார்பில் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவையொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டி ருந்ததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கண்ணகி கோயிலுக்குச் சென்ற னர். பாதுகாப்பு பணியில் இரு மாநில காவல்துறையினர் நூற்றுக் கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT