கோட்டக்குப்பத்தில் கார் பேனட்டில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் மதுவிலக்கு போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தனர். இதில் ஓட்டுநர் இருக்கையின் கால் பகுதியில் இருந்தும், காரின் பேனட் பகுதியில் இருந்தும் 184 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் செங்கல் பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த புத்திரகோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (40) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீ ஸார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை யும் பறிமுதல் செய்தனர்.