சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்டாலின் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகாவிடம் இன்று பகல் 1 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இரா.கிரிராஜன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
விஜயகாந்த், திருமாவளவன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். உளுந் தூர்பேட்டை தாலுகா அலுவலகத் தில் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று பகல் 12 மணிக்கு விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அதேபோல, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தான் போட்டியிடும் காட்டு மன்னார்கோவில் தொகுதியில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.