தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் முழுமையான மதுவிலக்கு அமலாகும்: கருணாநிதி உறுதி

செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் அண்ணாவின் பெயரால் ஒரு ஆட்சி நடை பெற்று வருகிறது. அது ஆட்சியல்ல காட்சி. காட்சியும், கண்காட்சியும் தமிழக மக்களுக்கு தேவை யில்லை. ஒரு நல்லாட்சிதான் தேவை. ஆளும் கட்சியின் அநியாயங்கள் தற்போது பட்டியலிடப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெறுகிற இந்த சூழலில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திரட்டி வைக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கெல்லாம் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

திமுக அரசியல் கட்சி மட்டுமல்ல, அது ஒரு சமுதாய இயக்கம். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு எல்லோருக்குமான இயக்கம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இன்றைய காலம் இளைஞர்களின் காலம். இளைஞர்கள்தான் இந்த நாட்டின் சக்தி. அவர்களால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும். எனவே, இளைஞர்கள் அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

திமுகவையும், வேறு சில கட்சிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சிகளை எதிர்த்து, அவற்றைப் புறக்கணித்து நமது நாகரிகத்தையும், வீரத்தை யும் காப்பாற்ற உருவாக்கப் பட்டுள்ளதுதான் இந்த திமுக கூட்டணி. இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும். வெற்றுக் கோஷ மும், வெறியாட்டமும் வெற்றி யைத் தேடி தராது. புத்தர் அமைதி வழியில் போராடி வென்றதைப் போல நாமும் அமைதி வழியில் போராடி வெல்ல வேண்டும்.

திமுகவின் தேர்தல் அறிக்கை யில் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வாழ்வாதார உயர் வுக்கும் பெரும் இடம் அளிக்கப் பட்டுள்ளது. வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை அளிக்கப்படும் என குறிப்பிடப் பட்டுள்ளது.இந்த தேர்தல் அறிக்கை மக்களின் உணர்வு களைப் பிரதிபலிக்கக் கூடியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன்கள் தள்ளு படி செய்யப்படும். அத்துடன் நெல்லுக்கும், கரும்புக்கும் அதற்குரிய விலை வழங்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதாகத்தான் இருக்கும் மதுவை மறப்போம், மதுவை ஒழிப்போம் என திமுக இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

SCROLL FOR NEXT