ராசிபுரம் அருகே பேரூராட்சி திமுக கவுன்சிலர் மற்றும் அவரது தந்தையை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதில், கவுன்சிலரின் தாய் படுகாயம் அடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி புளியங்காட்டைச் சேர்ந்தவர் பி.சிவக்குமார் (35). இவர் உள்ளாட்சித் தேர்தலின்போது ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை யாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மை யில் இவர் திமுகவில் இணைந்தார். சிவக்கு மாரின் மனைவி லாவண்யா (32) மற்றும் மகள் ரித்திகா (7) ஆகியோர் லாவண்யாவின் பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவக்குமார் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த சிவக்குமாரின் தந்தை பெரியண்ணன் (எ) அய்யாவுவை (60) அரிவாளால் வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி மாராயி மற்றும் சிவக்குமாரையும் மர்ம நபர்கள் அரிவா ளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில், பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாராயி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த நாமக்கல் எஸ்பி கே.மகேஸ்வரன், ராசிபுரம் டிஎஸ்பி ராஜூ மற்றும் நாமகிரிப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவக் குமாரின் குடும்பத்தினருக்கும் இவர்கள் நிலத் துக்கு அருகில் உள்ள தோட்டத்து உரிமை யாளருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந் தது தெரிந்தது. நிலப்பிரச்சினை தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.