தமிழகம்

பென்னாகரம் தொகுதியில் அன்புமணி வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி மனு தாக்கல் செய்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மல்லிகா முன்னிலையில் அன்புமணி மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 16-ம் தேதி நடக்கிறது. இந் நிலையில், கடந்த 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அன்று ஒரு சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 83 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை தினங்கள் என்பதால் மனு தாக்கல் இல்லை. இதையடுத்து, இன்று மீண்டும் மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி மனு தாக்கல் செய்துள்ளார்.

அவருடன் பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம், மாவட்ட அமைப்புச் செயலாளர் வெங்கடேஸ்வரன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் பி.வி. மாது ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT