மெய்யர் 
தமிழகம்

காரைக்குடி நகராட்சியில் 4-வது முறையாக மனைவியை எதிராக நிறுத்தி வென்ற ‘சென்டிமென்ட் ’ சுயேச்சை

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் ஒற்றைப்படை சென்டிமென்டுக்காக தனக்கு எதிராக மனைவியை நிறுத்தி 4-வது முறையாக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வென்றுள்ளார்.

காரைக்குடி நகராட்சி 11-வதுவார்டில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற சுயேச்சை கவுன்சிலர் மெய்யர்(57). இவர் தனது வெற்றிக்கு ஒற்றைப்படை சென்டிமென்டே காரணம் எனக் கருதுபவர்.

ஏற்கெனவே 3 முறை நடந்த தேர்தலில் அவரது மனைவியையும் தேர்தலில் நிறுத்தியதால்தான் வேட்பாளர்கள் எண்ணிக்கை ஒற்றைப்படையில் வந்தது. யாரேனும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை என்றால், தனது மனைவியையும் மனுவை வாபஸ் வாங்க வைக்காமல் தன்னை எதிர்த்துப் போட்டியிட வைத்தார். அதேபோல் இந்த முறையும் மெய்யரின் மனைவியையும் சேர்த்துதான் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வந்தது. இதனால் இந்த முறையும் சாந்தி தனது வேட்புமனுவை வாபஸ் வாங்காமல் கணவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 9 பேர் போட்டியிட்ட நிலையில்இந்த முறையும் மெய்யரே 716வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளரை251 வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வியுறச் செய்தார். அவரது மனைவி சாந்திக்கு 2 வாக்குகள் கிடைத்துள்ளன.

SCROLL FOR NEXT