விருதுநகர்: சாத்தூர் நகராட்சி தேர்தலில் மனைவி தோற்றதால் துப்புரவு மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர் நாகராஜன்(58). இவரது மனைவி சுகுணாதேவி. இவர் சாத்தூர் நகராட்சித் தேர்தலில் 19-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
ஆனால் 215 வாக்குகள் மட்டுமே பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுபிதா 595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் வேதனை அடைந்த நாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக சாத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.