தமிழகம்

தமிழகம் முழுவதும்6 வார்டுகளை ஐஜேகே கைப்பற்றியது

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: இந்திய ஜனநாயக கட்சி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட்டது. இதில் 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களம் கண்டன. இதில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர் நகராட்சியில் 1-வது வார்டில் சுஜாதா பெருமாள் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் 16-வது வார்டில் வரதராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 10-வது வார்டில்போட்டியிட்ட கருணாகரன் வெற்றிபெற்றார். அதேபோல் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் 11-வது வார்டில் போட்டியிட்ட கலையரசி வெற்றி பெற்றுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 3-வது வார்டில் நீலா ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பேரூராட்சியில் 7-வது வார்டில் போட்டியிட்ட சகுந்தலா வெற்றி பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT