மதுரை மாநகராட்சி தேர்தலில் நூறு வார்டுகளில் 99 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் 86-வது வார்டான கீரைத்துறையில் பூமா ஜனாஸ்ரீ முருகன் வெற்றிபெற்றார்.
மதுரை மாநகராட்சியில் 2001 தேர்தலில் பாஜக சார்பில் பாண்டீஸ்வரி, ராமலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதன் பிறகு இந்த தேர்தலில்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கீரைத்துறை வார்டில் வெற்றிபெற்ற பூமா, மதுரை மாநகர் பாஜக தலைவர் சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.