வந்தவாசி எம்எல்ஏ அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற திமுகவினர். 
தமிழகம்

வந்தவாசி எம்எல்ஏவை கண்டித்து திமுகவினர் தீக்குளிக்க முயற்சி

செய்திப்பிரிவு

வந்தவாசி நகராட்சி 2-வது வார்டு தேர்தல் தோல்விக்கு எம்எல்ஏதான் காரணம் எனக் கூறி திமுகவினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 2-வது வார்டில் திமுக சார்பில் காயத்ரி பிரபு போட்டியிட்டார். இவர், சுயேச்சை வேட்பாளர் ஷீலா மூவேந்தனிடம் தோல்வி அடைந்துள்ளார்.

சாலை மறியல்

இந்நிலையில், இந்த தோல்விக்கு வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினரின் திரைமறைவு வேலை என கூறி வேட்பாளர் திமுகவினர் மற்றும் விசிகவினர், வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டியலை காவல்துறை யினர் பறிக்க முயன்றதால், இரண்டு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களது முயற்சியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

SCROLL FOR NEXT