திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியாக வார்டுகளை கைப்பற்றியுள்ளது. 15 வார்டுகளை கொண்ட உதயேந்திரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. அதன்படி, திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகளில் திமுக 1, 2, 4, 6, 8 ஆகிய ஐந்து வார்டுகளில் வெற்றிப்பெற்றுள்ளது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றிப்பெற்றுள்ளார்.
நகராட்சிகளில் வெளியான முடிவுகள்:
1) ஜோலார்பேட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 1 முதல் 5 வார்டுகளில் திமுக வெற்றிப்பெற்றுள்ளது.
2) வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளில் திமுக 4 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றிப்பெற்றுள்ளது.
3) ஆம்பூர் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 3 வார்டுகளில் திமுக வெற்றிப்பெற்றுள்ளது.
பேருராட்சிகளில் வெளியான முடிவுகள்:
உதயேந்திரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுக, சுயேட்சை ஒரு வார்டில் வெற்றிப்பெறுள்ளார். இதன் மூலம் உதயேந்திரம் பேரூராட்சி திமுக கைப்பற்றியுள்ளது.
நாட்றாம்பள்ளி மொத்தம் உள்ள மொத்தமுள்ள 15 வார்டில் 3 வார்டுகளில் திமுக கைப்பற்றியுள்ளது. ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டில் திமுக 3 வார்டுகளிலும் அதிமுக ஒரு வார்டில் வெற்றிப்பெற்றுள்ளது.
வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதீப்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். எஸ்பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 900 காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வருவதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே திரண்டுள்ள திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து, இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.