தமிழகம்

காலை 10 மணி நிலவரம்: திமுகவிடம் கைமாறுகிறதா கொங்கு மண்டலம்?

செய்திப்பிரிவு

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி 21 மாநகராட்சிகளில் 19-ல் திமுக முன்னிலை வகிக்கிறது.

எந்தத் தேர்தலாக இருந்தாலும் மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று அறியப்படும் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே கொங்கு மண்டலம் அதிக கவனம் பெற்றது. திமுக கொங்கு மண்டலத்தை குறிவைத்து பிரச்சாரங்களை வலுப்படுத்தியது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை மாற்றிக் காட்டுவோம் என்று திமுக பகிரங்கமாகவே சவால்விட்டது.

இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து கொங்கு மண்டலத்திலும் திமுக முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக அரசியல் சலசலப்பைக் கண்ட கோவை மாநகராட்சியில் 16 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது. 50 வார்டுகளைக் கைப்பற்றினால் மேயரை திமுக தேர்ந்தெடுக்கும்.

கோவை மாநகராட்சி: 100 வார்டுகளில் 16 வார்டுகளில் திமுக வெற்றி.
சேலம் மாநகராட்சி: 60 வார்டுகளில் 10 வார்டுகளில் திமுக வெற்றி. ஒன்றில் அதிமுக வேட்பாளர் வெற்றி.
திருப்பூர் மாநகராட்சி: 60 வார்டுகளில் 6 வார்டுகளில் திமுக வெற்றி. ஒரு வார்டை பாஜக கைப்பற்றியுள்ளது.
கரூர் மாநகராட்சி: 48 வார்டுகளில் 8ல் திமுக வெற்றி.
ஈரோடு மாநகராட்சி: 60 வார்டுகளில் 6ல் திமுக வெற்றி. ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஒசூர் மாநகராட்சி: 45 வார்டுகளில் திமுக 13 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.

கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு 2 இடம்: இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஈரோடு மாநகராட்சியில் தலா ஓரிடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT