கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து சென்னை அண்ணா நகர் வீட்டில் ஓய்வெடுத்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது வீட்டில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அருகில் அமைச்சர் துரைமுருகன், வைகோவின் மகன் துரை வையாபுரி. 
தமிழகம்

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த வைகோவை சந்தித்து முதல்வர் நலம் விசாரிப்பு

செய்திப்பிரிவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடந்த மாதம்கரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தொற்று குணமடைந்தாலும், அரசியல் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வைகோவின் வீட்டுக்கு சென்று உடல்நலம் விசாரித்தார். அமைச்சர் துரைமுருகனும் உடன் சென்றார்.

புதிதாக 788 பேருக்கு கரோனா

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 473, பெண்கள் 315 என மொத்தம் 788 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2,692 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 14,033 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஈரோட்டில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,981 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT