பல்வேறு இடங்களில் ஹிஜாப் சர்ச்சைகள் வெடித்து வருவதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல் மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்தபெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறியதால் பிரச்சினைஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஹிஜாப்விவகாரத்தில் ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சங்கர மடத்தின் முன் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது. இதன் பின்னர் சங்கர மடத்துக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.