தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பறக்கும்படையினர் கடந்த 16-ம் தேதி நடத்திய சோதனையில் கடலூரில் ரூ.80 லட்சத்து 24 ஆயிரத்து 543 மதிப்புள்ள 952.43 கிராம் தங்க நகைகள், 18-ம் தேதி கடலூரில் ரூ.3 கோடியே 25 லட்சம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை, பறக்கும்படையினரால் ரூ.13 கோடியே 60 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் கடந்த 16-ம் தேதி ரூ.16 லட்சம் மதிப்பு பெயின்ட் வகைகள், 17-ம் தேதி ரூ.ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பு மதுவகைகள், ரூ.3.48 லட்சம் மதிப்பு வெளிமாநில லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை இக்குழுவினரால் ரூ.15 கோடியே 34 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.