தமிழகம்

மு.க.தமிழரசுவுடன் மக்கள் தேமுதிகவினர் சந்திப்பு

செய்திப்பிரிவு

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமி ழரசுவை, மக்கள் தேமுதிகவினர் நேற்று சந்தித்து, திமுக கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவதாக உறுதியளித்தனர்.

தேமுதிக திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் மகா.முத்துக்குமார், முன்னாள் அவைத் தலைவர் தமிழரசன் ஆகியோர் தேமுதிகவிலிருந்து விலகி, சந்திரகுமார் தலை மையிலான மக்கள் தேமுதி கவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர் களுடன், திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வல மாகப் புறப்பட்டு, சன்னதி தெருவில் தங்கியுள்ள மு.க.தமி ழரசுவை நேற்று சந்தித்தனர். திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்க ளிடம் மகா.முத்துக்குமார் கூறும் போது, “சந்திரகுமார் தலை மையிலான மக்கள் தேமுதி கவில் நாங்கள் இணைந்துள் ளோம். திருவாரூர் மாவட்டத் தில் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்டு, திமுக தலைவர் கருணாநிதியிடம் வெற் றியைச் சமர்ப்பிப்போம். மீண் டும் அவர் தமிழக முதல்வரா வார்” என்றார்.

SCROLL FOR NEXT