கோப்புப் படம் 
தமிழகம்

ஒற்றை மொழியின் ஆதிக்கமின்றி அனைவருக்கும் சமமான இந்தியாவை காண உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி, அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும், சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 21 (இன்று) உலக தாய்மொழி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்

"உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்."

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT