தேனி மாவட்டம், போடியில் 1903-ல் ஆண்டில் தொடங்கப்பட்டு 119 ஆண்டுகள் பழமையான ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது ஐந்தாயிரம் பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில் 1972-73-ல் பயின்ற மாணவர் சந்திப்பு நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள், தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதையொட்டி பள்ளிக்கு 200 புத்தகங்களை வழங் கினர். முன்னாள் மாணவர்கள் அமைப்பை உருவாக்கி பள்ளிக்கு நன்கொடை அளித்தனர்.
ஏற்பாடுகளை பள்ளிச் செய லாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.