தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக வெற்றிக்காக நடத்தப்பட்ட நாடகம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக வெற்றிக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி யுள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை, மாட்சிமையை, கேள்விக்குரியதாக மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நகர்வும்ஆளும் கட்சிக்கு சாதகமாகவே திட்டமிடப்பட்டு, நடைபெற்ற ஒருதேர்தல். மாநிலம் முழுவதும், ஆளும் கட்சியினரின் அராஜகங்கள் கொடிகட்டிப் பறந்தன.

வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதும் பட்டவர்த்தனமாக கள்ள ஓட்டுகளை பதிவு செய்வதும்என்று வாக்குச் சாவடிக்குள் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்கள் எல்லை மீறின. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கு, சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையை யாவது மனசாட்சியுடன், ஆளும் கட்சியின் அராஜகத்தைக் கண்டு அஞ்சாமல் நேர்மையாக நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் முன்வருமா? இந்த தேர்தல் ஆளும் கட்சியினர் எதிர்பார்த்தபடி, திமுகவின் வெற்றிக்காக, திரைக்கதை வசனம்எழுதப்பட்டு, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் திறமையாக நடத்தப்பட்ட ஒரு நாடகம். இதை தமிழகபாஜக வன்மையாகக் கண்டிக் கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT