தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன், சென்னை சாலிகிராமத்தில் நேற்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தெலங்கானாவில் முக்கிய நிகழ்வு இருந்தாலும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதற்காக முதல் ஆளாக வந்து வாக்கு செலுத்தியுள்ளேன். தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்தாலும் தமிழகத்தில் எனது வாக்கைசெலுத்துவதில் மகிழ்ச்சியாக உள்ளது.
யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதைவிட வாக்களிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.